• Nov 19 2024

திருமணத்தின் பின்னர் அதிகரித்த உடல் எடையை ஆறே மாதத்தில் குறைத்த நஸ்ரியா- இதை தான் பண்ணினாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

குழந்தை நட்சத்திரமாக சினி துறையில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. மலையாளத்தில் மிகவும் பரிட்சயமான நஸ்ரியா, 'நேரம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார்.தொடர்ந்து நையாண்டி, திருமணம் எனும் நிக்கா என தொடர்ந்து நடித்தார்.

சினிமா துறையில் கலக்கி வரும் நஸ்ரியா தனது 19வது வயதில் மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது என்றே சொல்லலாம். காரணம் இவர்களின் வயது வித்தியாசம் தான். இவர்களுக்கே இடையே கிட்டத்தட்ட 12 வயது வித்தியாசம் இருக்கும் என தெரிவிக்கின்றனர்.


திருமணத்திற்கு பின் உடல் எடை கூடிய நஸ்ரியா 6 மாதத்தில் உடல் எடையை எப்படி குறைத்தார் என்ற டிப்ஸ் வெளியாகியுள்ளது.கார்டியோ மற்றும் கலோரிகளை வேகமாக எரிக்கும் ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்துள்ளார், 4 மாதம் தொடர்ந்து செய்திருக்கிறார்.

6 மாதம் அதிகப்படியான லிக்வீட் உணவுகளை தான் எடுத்து கொண்டாராம். அதேபோல் காலை நேரத்தில் க்ரீன் ஸ்மூத்தியும் குடிப்பாராம். அரிசி, வெள்ளை சர்க்கரை, உப்பு ஆகியவற்றையும் தவிர்த்து விட்டாராம்.


ராகி, கம்பு போன்றவற்றை வெயிட் லாஸ் செய்ய உணவில் சேர்த்து கொண்டாராம். ஊற வைத்த 5 வகையான நட்ஸ், விதைகள் இவற்றை தினமும் சாப்பிட்டாராம் என்றும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement