இந்திய கிரிக்கெட் அணி வீரர் தங்கராசு நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார். இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார்.
அவருடைய தாய், தந்தை முன்னிலையில் மைதானம் திறக்கப்பட்டது. இந்த மைதானம் திறப்பு நிகழ்ச்சியில் காமெடி நடிகர் யோகிபாபு கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, விஜயசங்கர், சாய் கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Listen News!