• Sep 20 2024

மாமன்னன் படத்திற்கு தேசிய விருது நிச்சயம்! ரசிகர்கள் விமர்சனம்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் என பல பிரபலங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு வகையில் மிகவும் எதிர்பாக்கப்பட்டு காத்திருந்த மாமன்னன் வெளியானது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் கல்யாண் திரையரங்கில் மாமன்னன் படம் வெளியானது. பொதுமக்கள் அனைவரும் மாமன்னன் படத்தை பார்த்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இப்படம் சமூக மாற்றத்திற்கு ஒரு சிறந்த படமாக விளங்குவதாகவும், அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை இந்த திரைப்படம் வலியுறுத்தி வருகிறது எனவும் தெரிவிக்கின்றனர். மேலும், நடிகர் வடிவேல் நடித்த படங்களிலேயே ஒரு சிறந்த அங்கீகாரத்தை இப்படம் அவருக்கு கொடுத்துள்ளதாகவும் வடிவேலுவை இந்த கதாபாத்திரத்தில் பார்த்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது எனவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை இப்படத்திற்கு கூடுதல் வலுவை கொடுத்துள்ளதாகவும், வடிவேலுவின் நடிப்பை பாராட்டி நிச்சயம் இந்த கதாபாத்திற்கு தேசிய விருது தர வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.


Advertisement

Advertisement