• Sep 21 2024

தேசிய விருதினைப் பெற்ற பிரபல தயாரிப்பாளர் உயிரிழப்பு- அஞ்சலி செலுத்தி வரும் பிரபலங்கள்

stella / 11 months ago

Advertisement

Listen News!

கிரஹலட்சுமி புரொடக்‌ஷன்ஸ் என்கிற பெயரில் 20க்கும் மேற்பட்ட பல மலையாள  படங்களை தயாரித்தவர் தான் பிரபல தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி.வி.கங்காதரன்,ஒரு வடக்கன் வீரகதா', 'அசுவிண்டே அம்மா', 'தூவல் கொட்டாரம்' மற்றும் போன்ற படங்கள் இவர் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

சினிமாவைத் தாண்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2011ல் கோழிக்கோடு வடக்கு தொகுதியில் இருந்து சட்டப் பேரவைக்கு போட்டியிட்டார். மேலும் மாத்ருபூமியின் இயக்குநராகவும் சில வருடங்கள் இருந்தார்  அதே போல் ஒரு தயாரிப்பாளராக, அவர் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளையும் ஐந்து கேரள மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.


மேலும் இவர் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளையும் ஐந்து கேரள மாநில விருதுகளையும் வென்றுள்ளார். இவரின் பிள்ளைகளான ஷேனுகா ஜெய்திலக், ஷெக்னா விஜில் மற்றும் ஷெர்கா சந்தீப் ஆகியோரும் திரைப்படத்துறையில் பணியாற்றி வருகின்றனர். 

சமீபகாலமாக வயது மூப்பு காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். மேலும் இவரின் உடல்நிலை மிகவும் மோசமானதால் ஒரு வாரத்துக்கும் மேலாக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது இன்றைய தினம் இவர் இறப்புக்குள்ளாகியுள்ளார். இதனால் இவரின் உடலுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருவதோடு தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement