மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால், காட்ஃபாதர் படத்தின் பிசினஸும் தற்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்திய அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பலமொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
எனினும் சமீபத்தில் இந்தியிலும் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்ததால் தற்போது பான் இந்தியா நடிகையாக திகழ்கிறார் நடிகை நயன். இவர் கைவசம் இந்தியில் ஜவான், தமிழில் கனெக்ட், தெலுங்கில் காட்ஃபாதர், மலையாளத்தில் கோல்டு ஆகிய படங்கள் உள்ளன.
இதில் தெலுங்கில் இவர் நடித்து வந்த காட்ஃபாதர் திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகின்றது. இது மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காகும். காட்ஃபாதர் படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்
அத்தோடு தமிழில் ஜெயம், தனி ஒருவன், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும் என ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய மோகன் ராஜா தான் காட்ஃபாதர் படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். அவர் நடித்துள்ள முதல் தெலுங்கு படம் இதுவாகும்.
இவ்வாறு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால், காட்ஃபாதர் படத்துக்கு தெலுங்கில் எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. இதன் எதிரொலியாக இப்படத்தின் பிசினஸும் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. அதன்படி இப்படத்தின் டிஜிட்டல் உரிமை மட்டும் ரூ.57 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளது. மேலும் இதுதவிர சாட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமை ரூ.60 கோடிக்கும், திரையரங்க உரிமை ரூ.90 கோடிக்கும் விற்கப்பட்டு உள்ளதாம். இதன்மூலம் இப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ.207 கோடி வசூலித்துள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் ரிலீசாகவுள்ளது.
Listen News!