• Sep 21 2024

விவாகரத்து நடிகையுடன் நெருக்கம் காட்டும் விக்கி- சண்டையை கிளப்பிய நயன்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 9-ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். மேலும் இவர்களது திருமணம் சென்னை மகாபலிபுரம் பகுதியிலுள்ள நட்சத்திர ஹேட்டலில் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் இருவரும் ஹனிமூன் சென்று புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில், இவர்களின் திருமணத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோகளை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிடுவதாகவும் தெரிவித்து இருந்தது.

அன்றாடம் பல சர்ச்சையான செய்திகள் இவர்களை பற்றி வதந்திகளும் பரவி வரும் நிலையில், தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது.அதாவது விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி பின் ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரிலும் வெளியானது.

மேலும் இந்த படத்தின் போதே சமந்தா மீது விக்கி அதிகம் அக்கறை எடுத்துக்கொண்டதாகவும், இதனால் நயன் அப்போதே செம்ம கடுப்பாகியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது நயன்தாராவும், ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் லைகா தயாரிப்பில் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முதலில் நயனை நடிக்க வைப்பதாக கூறப்பட்டது.

ஆனால், அதன் பின் அஜித்துக்கு ஜோடியாக சமந்தாவை நடிக்க வைக்க உள்ளதாக விக்கியும் சிபாரிசு செய்திருக்கிறாராம்.

மேலும் இதை கேள்விப்பட்ட நயனும், விக்கி மீது கோபமடைந்து பிரச்சினை செய்துள்ளாராம். அதாவது பழைய பிரச்சினையும் இதையும் சேர்த்து நயன் விக்கியை ஒரு வழி பண்ணிவிட்டார் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு சண்டை வருவது சாதாரணமான ஒன்று என்றாலும், என்ன செய்வது என தெரியாமல் விக்கி விழிபிதுங்கி நிற்கிறாராம் என செய்திகள் வெளியாகி உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement