• Sep 20 2024

இறைச்சி விற்பனை நிறுவனத்தின் தூதுவரான நயன்தாரா… காரணம் என்ன..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் வலம் வருவது போல் தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பையும் தாண்டி பல தொழில்களையும் செய்து வருகிறார். அதாவது ஒரு சில நிறுவனங்களில் பங்குதாரராக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாது தனது காதல் கணவனான விக்னேஷ் சிவன் உடன் இணைந்து 'ரவுடி பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடாத்தி வருகின்றார். அந்நிறுவனத்தின் மூலம் பல்வேறு இளம் இயக்குநர்களுக்கும், புதுமுக கலைஞர்களுக்கும் வாய்ப்பு அளித்து வருகிறார்

சமீபத்தில் நயன்-விக்கி ஜோடிக்கு திருமணம் நடைப்பெற்றிருந்தமை நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயமே. திருமணத்தை தொடர்ந்து இருவரும் தத்தமது வேளைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நயன்தாரா தற்போது இந்தியில் ஷாருக்கானுக்கு ஜோடியாக 'ஜவான்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அத்தோடு தெலுங்கில் மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள 'காட்ஃபாதர்' எனும் படத்திலும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ளார்.

இவ்வாறாக படங்களில் பிஸியாக நடித்து வருகின்ற நம்ம நயன்தாரா பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது நயன்தாரா தற்போது பிரபல நிறுவனம் ஒன்றின் பிராண்ட் தூதுவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அந்தவகையில் ஆன்லைனில் இறைச்சி விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் ஃபிபோலா-வின் பிராண்ட் தூதுவராகவே நியமனம் பெற்றுள்ளார். இதற்காக இவர் நடித்த விளம்பரங்கள் மிக விரைவில் ஒளிபரப்பாகும் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக நயன்தாரா கூறுகையில் "தென் மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வரும் இந்த ஃபிபோலா நிறுவனத்தில் பிராண்ட் தூதுவரானதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" எனது தெரிவித்திருக்கின்றார். மேலும் "இந்த பிராண்ட் உடன் நீண்ட மற்றும் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்" எனவும் கூறி உள்ளார்.

அதுமட்டுமல்லாது மிகப்பெரிய அசைவ விரும்பியாக இருப்பவர் நம்ம நயன். குறிப்பாக கடல் உணவுகள் அவரும் மிகவும் பிடிக்கும் ரொம்பப் பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இதனால் தான் இந்த நிறுவனத்துடன் நயன்தாரா இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement