விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்ததோடு கடந்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் மிகவும் பிரமாண்டாகத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கெண்டனர்.
அத்தோடு இருவரும் ஹனிமூன் கொண்டாட முதலில் தாய்லாந்துக்குச் சென்றிருந்தனர்.அதனை அடுத்து நாடு திரும்பிய இவர்கள் கெரியரில் அதிக கவனம் செலுத்தி வந்தனர்.இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சென்றனர்.
பார்சிலோனா நகரில் நயன்தாராவை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து இருந்தார்.
இவ்வாறுஇருக்கையில் பார்சிலோனா, வெலன்சியா என்று சுற்றுலாத்தளங்களுக்கு செல்ல ஏற்பாடுகள் செய்தது முக்கியமான ஒருவர் தானாம். அது வேற யாருமில்லை நம்ம விஜே டிடி தானாம். திருமண பரிசாக விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் டிடி இந்த டிரிப்பை வழங்கியுள்ளார்.
ஏற்கனவே டிடி பல நாடுகளுக்கு சென்று ஊர்சுற்றியதால் அந்த இடங்களை டிடி தான் தேர்வு செய்து ஏற்பாடுகள் செய்துள்ளார் என்று விக்னேஷ் சிவன் நயன் படுத்தபடி இருக்கும் வீடியோவில் பதிவிட்டுள்ளார்.தற்போது தான் அது ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.
Listen News!