• Nov 17 2024

நயன்தாராவுக்கும் ‘வலிமை’ நடிகைக்கும் ஆக்சன் காட்சியா? தியேட்டர் தெறிக்குமே..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா மற்றும் ‘வலிமை’ படத்தில் நடித்த நடிகை ஆகிய இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இருவருக்கும் ஒரு அதிரடி ஆக்ஷன் காட்சி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடிக்கும் ’டாக்ஸிக்’ என்ற திரைப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் யாஷ் சகோதரியாக பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்க இருந்த நிலையில் அவர் கால்சீட் பிரச்சனையால் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் இதனை அடுத்து இந்த படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் அவர் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

பெரிய நடிகர்களுக்கு சகோதரியாக நடிக்க மாட்டேன் என்ற கொள்கையில் நயன்தாரா இருந்த நிலையில் அவருக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் என்று கூறப்பட்டவுடன் அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது. நடிகை நயன்தாரா ’ஜவான்’ திரைப்படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சியில் நடித்திருந்தார் என்பதும் அதேபோல் ’வலிமை’ படத்தில் ஹூமா குரேஷி ஆக்சன் காட்சியில் நடித்திருந்த நிலையில் இருவரும் மோதும் காட்சியை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி இந்த படத்தில் ’வலிமை’ நடிகை ஹூமா குரேஷி இணைந்துள்ளதாகவும் அவர் வில்லன் கூட்டத்தில் உள்ள ஒரு கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி அவருக்கும் நயன்தாராவுக்கும் ஒரு அதிரடி ஆக்சன் காட்சியை படமாக்க இயக்குனருக்கு கீது மோகன்தாஸ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சி திரையில் தோன்றும் போது தெறிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடி ஆக்சன் படமான ’டாக்ஸிக்’ படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் முடிந்துவிடும் என்றும் அடுத்த ஆண்டு இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement