• Sep 20 2024

அஜித்துக்கு தனித்தனியாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நயன்-விக்கி ஜோடி..! வைரல் பதிவு இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

அமரவாதி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அஜித், இன்று கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக கலக்கி வருகிறார். ரசிகர் மன்றங்களை கலைத்தும் இவருக்கு இன்னும் கொஞ்சம் கூட மாஸ் குறையவே இல்லை. இந்நிலையில், இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடும் அஜித், வழக்கம் போல சைலண்ட் மோடில் தான் இருக்கிறார்.

இதனிடையே அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது ஏகே 62 டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்திற்கு விடாமுயற்சி என டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. லைகா தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார், அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு வருடத்திற்கு முன்பாகவே ஏகே 62 படத்தில் கமிட்டான விக்னேஷ் சிவன், ஸ்கிரிப்ட்டில் சொதப்பியதால் தான் திடீரென நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. நயன்தாரா மூலமாக தான் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்ததாம். இதனால், அஜித் மீது நயனுக்கு கோபம் என்றும், இனிமேல் அவருடன் இணைந்து நடிக்கமாட்டேன் என சொல்லிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

அதேபோல், விக்கியும் அஜித் மீது கடுப்பில் இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், அதன்பின்னர் அப்படியெல்லாம் இல்லை என அவரே விளக்கமும் கொடுத்திருந்தார். ஏகே 62 கதை அஜித்துக்கு ஓக்கே தான், ஆனால் லைகாவுக்கு தான் பிடிக்கவில்லை எனவும் சொல்லி சமாளித்திருந்தார். 

இந்நிலையில், அஜித்தின் பிறந்தநாளுக்கு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனித்தனியாக வாழ்த்துக் கூறி டிவிட் செய்துள்ளனர்.


Advertisement

Advertisement