தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் காதல் ஜோடியாக வலம் வந்த விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கடந்த ஜுன் மாதம் 9ம் திகதி பிரமாண்டமாகத் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களின் திருமணத்தில் ரஜினிகாந்த், மணிரத்தினம், ஷாருக்கான், அனிருத், சூர்யா மற்றும் விஜய் சேதுபதி தங்கள் குடும்பத்துடனும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து திருப்பதி கோயில் தரிசனம், பத்திரிகையாளர் சந்திப்பு, ஹனிமூன் என பல விடயங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து நாடு திரும்பிய இவர்கள் தமது கெரியரில் பிஸியாக கவனத்தை செலுத்தி வந்தனர்.
இதனை அடுத்து இருவரும் தற்பொழுது ஸ்பெயின் நாட்டுக்கு ஹனிமூன் கொண்டாட சென்றுள்ளனர்.இந்த நிலையில் இன்று 75 வது சுதந்திர திருநாள் நடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.அத்தோடு குடிமக்கள் அனைவரும் தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்கள், வணிக வளாகங்கள் என எல்லா இடங்களில் சுதந்திர கொடியை மிளிர விட்டுவருகின்றனர்.
அந்த வகையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் அங்கிருந்து தேசிய கொடியை ஏந்தியபடி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரித்துள்ளனர். ஏ.ஆர் ரஹ்மானின் தாய் மண்ணே வணக்கம் பாடலுடன் பதிவை வெளியிட்டுள்ள விக்னேஷ், " சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள்! அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்! உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களே! இந்த நாளை மிகவும் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவோம்! ஒரு இந்திய குடிமகனாக நாம் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும்! உலகில் மிகவும் சுதந்திரமான, பாதுகாப்பான, ஜனநாயக, பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான வீடு நமது நாடுதான்! என குறிப்பிட்டுள்ளார்.
Listen News!