• Sep 20 2024

குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து திருமணம் செய்த கொண்ட ஜோடி தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். திருமணத்தினைத் தொடர்ந்து இருவரும் திருப்பதிக்கு சென்றனர்.பின்பு தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர்.  

தேனிலவு முடிந்து இந்தியா திரும்பியதும் நயன்தாரா, ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சில நாட்களுக்கு முன் இணைந்தார். விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக விளம்பர பணிகளில் ஈடுபட்டார்.


சில நாட்களுக்கு முன் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விமானம் மூலம் ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சுற்றுலா சென்றனர்.பார்சிலோனா நகரில் நயன்தாராவை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்தார்


சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தார். அங்கு தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். மேலும் தனது சொந்தக்கார குழந்தைகளுடன் நயன்தாரா சேர்ந்து விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தில் ‘குழந்தைகள் நேரம், எதிர்காலத்திற்காக பயிற்சி எடுக்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

 இதைப்பார்த்த ரசிகர்கள் ஒருவேளை நயன்தாரா கர்ப்பமாக இருப்பதை தான் இப்படி சூசகமாக சொல்கிறாரா விக்கி என கேள்வி எழுப்பி வருகின்றனர். 


Advertisement

Advertisement