• Sep 20 2024

தெருவோரம் ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டிருக்கும் கலைஞரை ரசித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா

stella / 2 years ago

Advertisement

Listen News!

நானும் ரௌடி தான் என்ற படத்தின் ஊடாக காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். கடந்த ஏழு ஆண்டுகளாக ரிலேஷன்சிஃப்ல இருந்த இவர்கள் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணத்திற்கு ரஜினிகாந்த், மணிரத்தினம், ஷாருக்கான், அனிருத் என முன்னணி பிரபலங்கள் பலரும் சூர்யா மற்றும் விஜய் சேதுபதி தங்கள் குடும்பத்துடனும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியிருந்தனர். திருமணமான கையோடு தாய்லாந்து ஹனிமூன் சென்ற இந்த ஜோடியின் அழகிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின. 


பின்னர்  நாடு திரும்பிய விக்னேஷ் சிவன் சமீபத்தில் நடந்து முடிந்த 44ஆவது ஒலிம்பியாட் சதுரங்க விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவை இயக்குவதல் பிஸியானார். தற்போது இந்த விழா நிறைவடைந்ததை ஒட்டி மீண்டும் தனது மனைவியுடன் ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றுள்ளார்.

 இது குறித்து விமானத்தில் தன் மனைவியின் கைகளை பிடித்துவாரு இருக்கு புகைப்படத்தை வெளியிட்ட விக்கி,  'தொடர் வேலைக்கு பிறகு நமக்காக சிறிது காலம் எனக் குறிப்பிட்டிருந்தார். தற்போது இவர்கள் ஸ்பெயின் நாட்டில் உல்லாச சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் தான் சமீபத்திய ட்ரெண்டாக உள்ளது. 

அந்த வகையில் தெருவோரம் ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டிருக்கும் கலைஞரை நயன்தாரா ரசித்தபடி நிற்கும் வீடியோவை தனது இன்ஸா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் விக்கி.இந்த வீடியோ வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement