• Sep 21 2024

மகனை காப்பாற்ற போராடும் நயன்தாரா.. வெளியானது O2 ட்ரெய்லர்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

லேடி சூப்பர் ஸ்டார் என்றாலே அது நம்ம நயன்தாரா தான். சினிமாவில் அறிமுகத்திலே முன்னணி நடிகர்களுடன் நடித்து சினிமாவின் மிக பிஸியான நடிகையாக வலம் வருகின்றார் . தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம்வருகின்றார்

கடந்த 28ஆம் திகதி வெளியான காத்து வாக்குல 2 காதல் திரைப்படத்தில் கண்மணி கதாப்பாத்திரத்தில் நடித்து நல்ல வசூல் வேட்டை திரைப்படமாக நல்ல வரவேற்பை குவித்துள்ளது.

இந்நிலையில் நயன்தாராவின் புதிய படம் பற்றிய தகவல்கள் சமீபத்தில் வெளியாகியது. அந்தவகையில் இப்படத்தில் நயன்தாராவின் O2 படத்தில் அம்மா அவதாரம் எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன .

கதாநாயகிக்கு முக்கியம் கொடுத்து உருவாகும் இப்படத்தில் நயன்தாரா 8 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்துள்ளார் . இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியது.

இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த படம் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு டைட்டில் வீடியோவும் வெளியாகியுள்ளது.. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் வெங்கட்பிரபுவின் உதவியாளர் ஜி எஸ் விக்னேஷ் என்பவர் எழுதி இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் கதையை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் கதைப்படி ”விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தன் வயது மகனுடன் மாட்டி கொள்கிறாள்.. நுரையீரல் பிரச்சினைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் சகபயணிகள் குறி வைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகின்றார். என்பதை பரபரப்பாகச் சொல்லும் படம்தான் “O2”. தமிழ் நாடு, கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது O2 படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது. மண்ணுக்குள் அடியில் புதைந்துவிடும் பேருந்தில் அனைவரும் சுவாசிக்க முடியாமல் தடுமாற, நயன்தாராவின் பையன் வைத்திருக்கும் உயிர் காக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை கைப்பற்ற அனைவரும் முயல, அவர்களிடம் இருந்து தன் மகனை நயன்தாரா எப்படி காப்பாற்றுகிறார் என்பதை சொல்லும் விதமாக இந்த டிரைலர் உருவாக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement