• Nov 19 2024

திருமண விடயத்தில் சமந்தாவைப் பின்பற்றும் நயன்தாரா-இது நல்லதுக்கு இல்லையே என்று புலம்பி வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை தான் நயன்தாரா. இவர் பிரபல இளம் இயக்குநரான விக்னேஷ் சிவன் என்பவரை பல வருடங்களாகக் காதலித்து வருகின்றார்.

இவர்களின் திருமணம் ஜூன் மாதம் 9ம் தேதி திருப்பதியில் திருமணம் நடக்க இருப்பதாக எற்கனவே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. திருமண நிகழ்ச்சிக்கு ஒரு சிலருக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து சென்னையில் நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்களாம். இந்த நிலையில் நயன்தாரா பற்றி புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது நயன்தாரா தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளாராம்.

இதனால் திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்கு கிளம்பாமல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக நாக சைதன்யாவை திருமணம் செய்த சமந்தாவும், தேனிலவுக்கு செல்லாமல் படப்பிடிப்புக்கு கிளம்பினார். அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்துவிட்டது.இந்நிலையில் நயன்தாராவும் சமந்தா வழியில் செல்லவிருக்கிறாரா, இது நல்லதுக்கு இல்லையே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/3mI2KccPi4w

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement