நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மூலம் காதலர்களாக மாறிவர்கள் தான் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இதனைத் தொடர்ந்து பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். அதன் பிறகு இந்த தம்பதி வாடகை தாய் மூலம் உயிர் மற்றும் உலகு என்கிற இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து தற்பொழுது மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
அத்தோடு தொடர்ந்து இருவரும் கெரியரில் கவனம் செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது புதிய ஸ்கின் கேர் நிறுவனமான 9 ஸ்கின்ஸ் நிறுவனத்தை மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். அந்த நிறுவனம் சிங்கப்பூர் தொழிலதிபர் ஒருவருடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் எடுத்துக்கொண்ட சில ரொமாண்டிக் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் அவர் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!