• Nov 14 2024

முதன்முறையாக மகன்களின் முகங்களை காட்டிய நயன்தாரா... வெளியானது வீடியோ... அட உயிர், உலகம் அச்சு அசல் அப்பா மாதிரியே இருக்காங்களே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து கல்யாணம் பண்ணியமையைத் தொடர்ந்து கடந்த வருடம் வாடகைத் தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றனர்.


திருமணமாகி சில மாதங்களிலேயே குழந்தை பெற்றது பெரிய சர்ச்சை ஆனது. ஆனால் எங்களுக்கு 5 வருடத்திற்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்றுவிட்டது என அவர்கள் விளக்கம் தெரிவித்து, தற்போது மகன்களை நன்றாக வளர்த்து வருகின்றார்கள்.


அத்தோடு தமது குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என தன் இரண்டு மகன்களுக்கும் பெயர் சூட்டியுள்ளனர். மகன்கள் பிறந்து சில மாதங்கள் கடந்த போதிலும் இதுவரை காலமும் அவர்களின் முகத்தை உலகிற்கு காட்டவில்லை. 


இந்நிலையில் தற்போது தனது மகன்களுடன் இருக்கும் அழகிய வீடியோவை பகிர்ந்து மகன்களின் முகங்களை உலகிற்கு காட்டியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் மகன்கள் இருவரும் அச்சு அசலாக அப்பா விக்கியைப் போலவே இருப்பதாக கூறி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement