• Sep 20 2024

விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' படத்தின் டிரைலர் எப்போ தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் , 'மார்க் ஆண்டனி' பல மொழிகளில் வெளியிட தயாராகி இருக்கிறது . இப்படத்தில் விஷாலுடன்  எஸ்.ஜே சூர்யாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார். அத்தோடு இயக்குநர் செல்வராகவனும் நடிக்கின்றார். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது.

இப்படம் செப்டெம்பர் மாதம் 15-ஆம்  திகதி  விநாயகர் சதுர்ச்சியை முன்னிட்டு வெளியாகவுள்ளது .


அந்தவகையில் மார்க் ஆண்டனி படத்தில்   டி.ராஜேந்தர் குரலில்  'அதிருதா..' என்கிற பாடலை வெளியிட்டுஇருந்தனர் .விரைவில் இப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில்  3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தன.


 இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் ட்ரைலர் செப்டம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என்றும், செப்டம்பர் 10ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமான ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படத்தின் வேலைகள் நிறைவுபெற்ற நிலையில்.  , 'மார்க் ஆண்டனி' படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் அறிவித்தமையால் . சுவாரஸ்யமான டீசரைத் தொடர்ந்து, 'மார்க் ஆண்டனி'க்கான நம்பிக்கைக்குரிய டிரெய்லர் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருகின்னர்.


Advertisement

Advertisement