• Sep 21 2024

மீண்டும் ‘அந்த மாதிரி’ காட்சிகளில் நடிக்கும் நயன்தாரா..? வெளியான ஷாக்கிங் தகவல்.!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக ஜெய்க்கு ஜோடியாக தன்னுடைய 75-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. ஏனென்றால், நடிகை நயன்தாரா கடந்த 2007ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான பில்லா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். படத்தில் பிகினி உடையில் நடித்திருந்தார்.

படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிகளும் அவர் மிகவும் கவர்ச்சியாகவே நடித்திருப்பார் என்றே கூறலாம். இந்த நிலையில், தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் பிகினி காட்சிக்கு ஓகே சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அவர் தற்போது ஷாரூக் கானுடன் அவர் நடித்து வரும் ஜவான் படத்தில் மீண்டும் கவர்ச்சியான ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 இதற்காக அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமணம் முடிந்து கவர்ச்சி காட்சிகளில் அவர் நடிக்கவுள்ளதாக பரவும் தகவல் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.


Advertisement

Advertisement