• Nov 10 2024

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண செலவு மட்டும் இத்தனை கோடியா…சொக்கிப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நீண்ட காலமாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் நேற்று திருமணம் செய்து கொண்டனர்.

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் இன்று அவர்கள் இருவரும் திருப்பதி செல்லவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் மற்றுமொரு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ஐந்து நட்சத்திர ஹோட்டல் முழுவதிலும் உள்ள அறைகள் வாடகைக்கு எடுத்தது, கண்ணாடியிலான செட்டை கலை இயக்குநர்கள் மூலம் வடிவமைத்தது, லைடிங்ஸ் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள், அறுசுவை விருந்து வைத்தது மற்றும் திருமணத்திற்கு வருகை தரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஒரே டிரெஸ்கோட் உருவாக்கி கொடுத்தது உள்பட அனைத்து செலவுகளும் சேர்ந்து மொத்தம் 20 கோடி செலவு ஆனதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் இந்த திருமணத்தை கலர்புல்லாக கவுதம் வாசுதேவ் மேனன் படமாக்கி உள்ளதாகவும் இந்த படத்தைகு 25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவதால் திருமண செலவு முழுவதும் நிச்சயமாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement