• Sep 19 2024

அன்னபூரணியாக அவதாரம் எடுத்த நயன்தாரா... முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயித்தாரா...

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆனது. நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஜெய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் ட்ரெய்லர் மற்றும் போஸ்டர்களிலேயே அதிக கவனம் ஈர்த்தது.


அதை தொடர்ந்து நேற்று படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வந்தனர். அதன்படி அக்ரஹாரத்து மாமியாக இருக்கும் நயன்தாராவுக்கு உணவின் மேல் இருக்கும் காதலும் அதற்காக அவர் போராடுவதும் தான் இப்படத்தின் கதை.


வழக்கம்போல் கதையின் நாயகியாக மாஸ் காட்டி இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் இதன் மூலம் அறுசுவை விருந்தும் படைத்திருக்கிறார். மொத்தமாக குடும்பங்கள் ரசிக்கும் படியாகவே இருப்பது கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கிறது.


அன்னபூரணி முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்  அடிப்படையில் பார்க்கும் போது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் முதல் நாளில் 1.5 கோடி வரை வசூலிக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் நேற்று விடுமுறை இல்லாத நாளாக இருந்த காரணத்தினால் அன்னபூரணி இந்திய அளவில் 0.60 கோடியை தான் வசூலித்திருந்தது.

Advertisement

Advertisement