• Sep 20 2024

நயன்தாராவை கையில் தூக்கி முத்தமிடும் அவரது தாயார்.. அட சிறு வயதிலேயே இவ்வளவு அழகாக இருந்திருக்காங்க..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவரின் நடிப்பிற்கும் அழகிற்கும் மயங்காதவர்கள் இல்லை எனக் கூறலாம். அந்தளவிற்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டிருக்கின்றார். தமிழ் சினிமாவின் இவருக்கான அறிமுகத்தை கொடுத்த படம் 'ஐயா'. இப்படத்தில் சரத்குமாரிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.


அதனைத் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வந்த நயன்தாராவின் கைவசம் தற்போது 'இறைவன், ஜவான், காட் ஃபாதர், லேடி சூப்பர்ஸ்டார் 75' என பல படங்கள் உள்ளன. அதுமட்டுமன்றி இவர் சமீபகாலமாக பெண் கதாபாத்திரங்களிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.



லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகின்ற இவர் கடந்த ஜூன் 9-ஆம் திகதி தனது காதலனான இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் தேன் நிலவுப் புகைப்படங்கள் சமீபகாலமாக சமூக வலைத்தளங்களை வட்டமிட்ட வண்ணமே இருக்கின்றன.



இந்நிலையில் தற்போது நயன்தாரா தனது தாய், தந்தையுடன் எடுத்துக்கொண்ட சிறு வயதுப் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதில் அவருடைய தாய் தூக்கி வைத்து முத்தம் கொடுத்து கொஞ்சுகின்றார். அப்புகைப்படங்கள் ஆனவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement