• Sep 20 2024

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் நயன்தாராவின் படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

லேடி சூப்பர் ஸ்டார் என்றாலே அது நம்ம நயன்தாரா தான். சினிமாவில் அறிமுகத்திலே முன்னணி நடிகர்களுடன் நடித்து சினிமாவின் மிக பிஸியான நடிகையாக வலம் வருகின்றார் . தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம்வருகின்றார்

கடந்த 28ஆம் திகதி வெளியான காத்து வாக்குல 2 காதல் திரைப்படத்தில் கண்மணி கதாப்பாத்திரத்தில் நடித்து நல்ல வசூல் வேட்டை திரைப்படமாக நல்ல வரவேற்பை குவித்துள்ளது.

இந்நிலையில் நயன்தாராவின் புதிய படம் பற்றிய தகவல்கள் சமீபத்தில் வெளியாகியது. அந்தவகையில் இப்படத்தில் நயன்தாராவின் O2 படத்தில் அம்மா அவதாரம் எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன .

கதாநாயகிக்கு முக்கியம் கொடுத்து உருவாகும் இப்படத்தில் நயன்தாரா 8 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்துள்ளார் . இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் தற்போது O2 படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.இந்த படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹோஸ்ஸ்டாரில் வெளியாக உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நயன்தாரா நடிப்பில் அடுத்த படமாக உருவாகி வருகிறது O2 திரைப்படம். நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.
அந்தவகையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஜூன் 17-ஆம் திகதி வெளியாக உள்ள இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement