• Sep 21 2024

லியோ படத்தின் ‘ நான் ரெடி’ பாடலால் நயன்தாராவுக்கு அடித்த அதிஷ்டம்- விக்னேஷ் சிவன் தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

லியோ படத்தில் இருந்து வெளியான ‘ நான் ரெடி’ பாடல் சில தினங்களாக மிகவும் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது . அந்தப் பாடலை எழுதியவர் விஷ்ணு இடவல். இயல்பாகவே விஷ்ணு ஒரு இயக்குநரும் கூட. அந்தப் பாடலில் அமைந்த வரிகள் இளைஞர்களை குறிப்பாக குழந்தைகளை தவறான வழிக்கு கொண்டு செல்ல வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் சிலர் இந்தப் பாடலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் அந்தப் பாடல் ஆசிரியரான விஷ்ணு இடவல் புதியதாக ஒரு வெப் சீரிஸை இயக்கப் போகிறாராம். அந்த வெப் சீரிஸில் நடிகை நயன்தாரா தான் ஹீரோயினாம். அதற்கு காரணம் விக்னேஷ் சிவன் தான் என்று சொல்கிறார்கள்.


சில தினங்களுக்கு முன்பு இயக்குநர்களுக்கான ஒரு கூட்டம் நடைபெற்றதாம். அதில் விக்னேஷ் சிவன், லோகேஷ் போன்ற பல இயக்குநர்கள் கலந்து கொண்டார்களாம். அப்போது இந்த நான் ரெடி பாடலை பற்றியும் விஷ்ணு இடவல் ஒரு வெப் சீரிஸை இயக்கப் போகிறார் என்பதை பற்றியும் பேச்சு வந்ததாம்.

அவ்ளோதான் விக்னேஷ் சிவன் உடனே விஷ்ணு இடவலின் போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு தன் காதல் மனைவிக்காக அவரிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறார். இப்படித்தான் நயனுக்கு அந்த வெப் சீரிஸில் நடிக்க வாய்ப்பு வந்ததாம்.


ஒரு பக்கம் தன்  கணவருக்காக பில்டிங் பில்டிங்காக வாங்கி போட்டுக் கொண்டு அந்தப் பிசினஸை விக்னேஷை பார்க்க சொல்கிறார் நயன். இன்னொரு பக்கம் மனைவிக்காக வாய்ப்புகளை விக்னேஷ் சிவன் தேடிக் கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement