தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து 'ரவுடி பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடாத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்நிறுவனம் குஜாராத்தி மொழியில் முதல் திரைப்படத்தை தற்போது தயாரித்துள்ளது.
அதாவது ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் 'சுப்யாத்ரா' என்ற திரைப்படம் ஏப்ரல் 28- ஆம் தேதி உலக அளவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்தப் படத்தை தேசிய விருது பெற்ற மணீஷ் சைனி என்பவர் இயக்குகிறார். மேலும் நடிகர் மில்ஹர் நடிக்கிறார்.
அந்தவகையில் 2016 ஆம் ஆண்டு எம்.மணிகண்டன் இயக்கிய ’ஆண்டவன் கட்டளை’ திரைப்படம் வெளியாகி படு ஹிட் ஆனது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் தான் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் ரீமேக் ஆகிறது.
இந்நிலையில் இப்படத்தினை ரீமேக் செய்வதன் மூலம் தான் குஜராத்தி சினிமாவிலும் தயாரிப்பாளராக அறிமுகமாகிறது விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி. தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களைத் தயாரித்துள்ள ரவுட் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போது தான் முதன்முறையாக இதர மொழியில் படத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் மல்ஹர் தக்கர், மோனல் கஜ்ஜார் நடித்துள்ள இப்படத்தை தேசிய விருது வென்ற இயக்குநர் மனீஷ் சைனி இயக்கியுள்ளார். இப்படமானது ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி உலக அளவில் பல்வேறு திரையங்குகளில் வெளியாகிறது. இது தொடர்பாக சமீபத்தில் ரவுடி பிக்சர்ஸ் டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக திரைப்பட வெளியீடு குறித்து அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Listen News!