• Nov 17 2024

பக்ரீத் பண்டிகையை தனது குடும்பத்துடன் இணைந்து கோலாகலமாகக் கொண்டாடிய நஸ்ரியா- அட மகள் நன்றாக வளர்ந்து விட்டாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது கியூட்டான நடிப்பினால் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்த முக்கியமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நஸ்ரியா. இவர் இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் .

இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தனுஷுடன் நையாண்டி, ஜெய்க்கு ஜோடியாக திருமணம் எனும் நிக்கா போன்ற படங்களில் நடித்த நஸ்ரியா சினிமாவில் பேமஸான நடிகையாக வளர்ந்து வந்தார்.

இருப்பினும் இவர் கடந்த 2014-ம் ஆண்டு மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் மலையாளத்தில் வெளியான பெங்களூரு டேஸ் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படத்தில் இருவருக்கும் காதல் ஏற்பட்டதை அடுத்தே திருமண பந்தத்தில் இணைந்தனர்.

திருமணத்திற்கு பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்ட நடிகை நஸ்ரியா, இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். நஸ்ரியா - பகத் பாசில் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

திருமணத்துக்கு பின் சுமார் 5 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, கடந்த 2019-ம் ஆண்டு வெளியான டிரான்ஸ் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இப்படத்திலும் அவர் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதையடுத்து சமீபத்தில் அண்டே சுந்தரநிகி என்கிற தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில், நேற்று பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நடிகை நஸ்ரியாவும், தனது கணவர் பகத் பாசில் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து பக்ரீத் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே அதிகளவான வரவேற்பைப் பெற்று வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்

Advertisement

Advertisement