• Sep 20 2024

காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் குத்துப்பாட்டுக்கு செம ஸ்டைலாக பரத நாட்டியம் ஆடிய நீபா- தெறிக்க விடும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் சில ஆண்டுகளுக்கு சின்னத்திரையில் முக்கியமான நடிகையாக வலம் வந்தவர் தான் நீபா.இவர் ஷு தமிழ் விஜய் டிவி என பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.அத்தோடு இவர் மிகவும் திறமையான நடனக் கலைஞர் ஆவார்.

மேலும் இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். குறிப்பாக விஜய் நடிப்பில் வெளியாகிய காவலன் திரைப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.அத்தோடு இடையில் திருமண பந்தத்தில் இணைந்ததால் சில காலம் நடிக்காமல் இருந்தார்.


இதனைத் தொடர்ந்து தற்பொழுது மீண்டும் செவ்வந்தி, பாரதி கண்ணம்மா போன்ற ஒரு சில சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மறுபடியும் பரதநாட்டியம் மற்றும் வெஸ்டர்ன் நடனத்திலும் கலக்கி வருகிறார்.


அந்த வகையில் நடிகை நீபா பிரபல கொரியோகிராபரான அசார் என்பவருடன் சேர்ந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் குத்துப்பாடலான ‘டிப்பம் டிப்பம்’ என்ற கதீஜா பாடலுக்கு பரதநாட்டிய அசைவுகளை போட்டு அசத்தியுள்ளார். இவர்களது இந்த அசத்தலான வீடியோ இணையத்தை தெறிக்கவிட்டு வைரலாக்கி வருகிறது.



Advertisement

Advertisement