விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுமே பொதுவாக ரசிகர்களை கவர்ந்தவை தான். அதிலும் குறிப்பாக 'நீயா நானா' நிகழ்ச்சிக்கென்று பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளின் கீழ் தொகுப்பாளர் கோபிநாத் பிரமாதமாக நடத்தி வருகிறார். இதில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள், பொருளாதாரம் சார் விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப் படுகின்றன.
இந்நிலையில் இந்த வாரமும் சுவாரஸ்யமான தலைப்பின் கீழ் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் நீண்ட கூந்தலுடைய பெண்கள், நீண்ட கூந்தல் பெண்களுக்கு தேவையில்லாதது என சொல்லும் பெண்கள் என இரு பிரிவின் கீழ் இந்த விவாதம் இடம்பெற்றது.
அதில் ஒரு பெண் குறுகிய கூந்தல் வைத்திருப்பதால் போல்ட் ஆகவோ அல்லது மற்றவங்களுக்கு பாதுக்காப்பாகவோ இருக்கும் என நீங்கள் உணர்கிறீர்களா என எதிர்தரப்பில் உள்ள பெண்னிடம் கேட்கின்றார். அதற்கு அந்த பெண் தான் போல்ட் ஆக இருப்பதாக உணர்வதாக பதிலளிக்கின்றார்.
மேலும் ஒரு பெண் "நீங்க எல்லாருமே ஷார்ட் ஹேர் தானே வச்சிருக்கீங்க, அப்புறம் கல்யாண மேடையில் மட்டும் எப்படி நீட்டு ஜவுரி முடி வச்சு வந்திடுறீங்க' எனக் கேட்கின்றார். அதேபோன்று "தென்னிந்திய கலாச்சாரத்தின் படி உங்கள பொண்ணு பார்க்க வாறாங்க, நீங்க முடியைக் கட் பண்ணிட்டு உட்கார்ந்திருக்கிறதுக்கும், நீட்டு முடி வாரி உட்கார்ந்து இருப்பதற்கும் என்ன சொல்லுவாங்க" எனக் கேட்கின்றார்.
அதற்கு இன்னொரு பெண் "ஒரு பெண்ணோட வாழ்க்கை கல்யாணத்தில் முடிஞ்சிடுமா, அதுதான் முக்கியமா, கல்யாணம் தான் முக்கியமா" எனக் கேட்டு எதிர்த்து வாதிடுகின்றார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் கோபிநாத்தும் அவர்களின் விவாதத்தை பார்த்தபடி நிற்கின்றார்.
Listen News!