தமிழ் சினிமாவில் இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கைதி.இந்த படத்தில் கார்த்தி ‘டில்லி’ என்ற கைதி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். கதாநாயகி இல்லாமலும் பாமல்கள் இல்லாமலும் வித்தியாசமான ஜானரில் இப்படம் எடுக்கப்பட்டது.
இந்த படம் தமிழில் பெரும் ஹிட் அடித்த நிலையில் இதை ஹிந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகள் தொடங்கியது.ஹிந்தியில் இந்த படத்தை அஜய் தேவ்கனே நடித்து, இயக்கியும் உள்ளார். இந்த படத்திற்கு ஹிந்தியில் ‘போலா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி ஹிந்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதேசமயம் தமிழ் ‘கைதி’ ரசிகர்களின் அதிருப்தியும் பெற்றுள்ளது.படத்தில் அஜய் தேவ்கன் கையில் சூலத்துடன் தோன்றும் காட்சிகள் பாலகிருஷ்ணாவின் அகண்டா படத்தை நினைவுப்படுத்துவது போல உள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் சிலர் கைதி படத்தில் இருந்த எதார்த்தம் இதில் இல்லாததாகவும், அதிகமான மாஸ் பில்டப் வசனங்கள் உள்ளதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழில் ஹிட் அடித்த விக்ரம் வேதா படம் ஹிந்தியில் ரீமேக் ஆனபோதும் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Listen News!