• Sep 20 2024

நெல்சா இது ஒரு சாதனை ரஜினியுடன் இணைந்து மறக்க முடியாத படத்தைக் கொடுங்கள்- விக்னேஷ் சிவன் போட்ட முக்கிய பதிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!


கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ரஜினிகாந்தின் 169வது படத்தை இயக்கி வருகின்றார். இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கும் அனிரூத் தான் இசையமைக்கின்றார்.

இப்படத்திற்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதோடு இப்படத்தின் டைட்டில் பெஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியிருந்தது.அத்தோடு இப்படத்தின் படப்பிடிப்பானது நேற்று முதல் சென்னையில் உள்ள ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் ஆரம்பமாகி உள்ளது.


 இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இந்த போஸ்டர் பெற்றுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயிலர் படத்தின் முதல் லுக் போஸ்டரை பகிர்ந்து ஒரு பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில், "வாழ்த்துகள் அன்புள்ள நெல்சன்!  உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்! ரஜினிகாந்தை இயக்குவது ஒரு சாதனை! எங்களுக்காக உன் சிறந்ததை நீ வைத்திருக்கிறாய் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.நெல்சன்! உங்கள் கற்பனை மற்றும் படைப்பாற்றலால், ரஜினிகாந்த் & நமது கிங் அனிரூத்துடன் இணைந்து ஒரு மறக்கமுடியாத திரைப்படத்தைக் கொடுங்கள்" என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.




Advertisement

Advertisement