• Sep 21 2024

தலைவர் படப்பிடிப்பு கிடப்பில் கிடக்க வெளிநாட்டில் ஜாலி பண்ணும் நெல்சன் திலீப் குமார்- விளாசி வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெணியான அண்ணாத்த திரைப்படத்தைத் தொடர்ந்து ரஜனிகாந்த் நடித்து வரம் திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தை 'பீஸ்ட்' படத்தின் இயக்குநர், நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகின்றார்.

 இந்த படத்தை, சன் பிச்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.கிட்ட தட்ட 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில், விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் அடுத்த பட்ட படப்பிடிப்பில் தமன்னா, ரம்யா கிருஷ்ணா போன்றவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தின் போஸ்டர் கூடசில மாதங்களுக்கு முதல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், கிடைத்த கேப்பில்... நெல்சன் திலீப் குமார் எங்கு சென்றுள்ளார் என்று கூறினால் ஆச்சரியப்படுவீர்கள், ஆம் கத்தார் நாட்டிற்கு தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க பறந்து சென்றுள்ளார்.


இதுகுறித்த புகைப்படத்தை, அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்களும் என்ன சார் தலைவர் படப்பிடிப்பை விட்டுவிட்ட ஜாலியாக வெளிநாடு சென்றுள்ளீர்களே என... காமெடியாக கமெண்ட் போட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement