விஜய்யின் பீஸ்ட் பட தோல்விக்கு பின்னர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில். அதன் ரிசல்ட் என்ன என்பதை பார்க்கலாம்.
நெல்சன் என்றாலே ஜாலியான டைரக்டர் என்று தான் அனைவருக்கும் தெரியும். விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நெல்சன், பீஸ்ட் படத்தில் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தார். கடந்தாண்டு தமிழ் புத்தாண்டுக்கு திரைக்கு வந்த பீஸ்ட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் வசூலித்தாலும், அதன் விமர்சனங்கள் படு மோசமாக இருந்தன. இந்த படத்தின் ரிலீசுக்கு பின்னர் விஜய்யை விட அதிகளவில் ட்ரோல்களை சந்தித்தது நெல்சன் தான்.
பீஸ்ட் ரிலீசாகும் முன்பே ரஜினியின் ஜெயிலர் படத்தை இயக்க கமிட் ஆகி இருந்தார் நெல்சன். பீஸ்ட் ரிசல்டை பார்த்துவிட்டு, நெல்சனை ஜெயிலர் படத்தில் இருந்து தூக்க பல தரப்பில் இருந்தும் ரஜினிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதை அவரே ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் வெளிப்படையாக சொல்லி இருந்தார். அறிவித்த பின்னர் அவரை படத்தில் இருந்து நீக்கினால் அவரது கெரியர் என்ன ஆகும் என்பதை மனதில் வைத்து, அவரை நீக்க வேண்டாம் என திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம்.
இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னரே ஜெயிலர் படத்தை தொடங்கி இருக்கிறார் நெல்சன். இப்படம் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டும் அதுமட்டுமின்றி ரஜினியும் அண்ணாத்த படம் தோல்வி அடைந்ததால், அவருக்கும் ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தோடு இருந்த நெல்சன், ஒருவழியாக படத்தை எடுத்து வெற்றிகரமாக திரைக்கு கொண்டு வந்துவிட்டார்.
இன்று ஜெயிலர் திரைப்படம் உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இதன்மூலம் நெல்சன் கம்இந்த முறை நெல்சனின் குறி மிஸ் ஆகவில்லை. ரஜினியை வைத்து காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட், டான்ஸ் என ஒரு பக்கா கமர்ஷியல் படமாக ஜெயிலர் படத்தை கொடுத்திருக்கிறார் நெல்சன்.
பீஸ்ட்டில் மிஸ் ஆன வெற்றியை இப்படத்தின் மூலம் மீண்டும் பெற்று மாஸ் ஆன கம்பேக் கொடுத்திருக்கிறார் நெல்சன். நெல்சன் செய்துள்ள இந்த தரமான சம்பவத்தால் இன்னும் சில வாரங்களுக்கு பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலர் ராஜ்ஜியம் தான் என்பது உறுதியாக தெரிகிறது.எனவே வசூலில் பட்டையை கிளப்புமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!