• Sep 20 2024

ரஜினியின் படத்திற்கு நெல்சன் வாங்கவுள்ள சம்பளம்…கிடுகிடுவென உயர்த்தி விட்டாரே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குநரானார் நெல்சன்.நயன்தாரா நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கினார் நெல்சன். மேலும் இப்படம் கடந்தாண்டு வெளியானது. காமெடி கலந்த ஆக்க்ஷன் படமாக வெளியான இப்படம் அனைத்து விதமான ரசிகர்களையும் கவர்ந்தது. அதுமட்டுமில்லாமல் இப்படம் நூறு கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என தொடர்ந்து இரு வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் கோலிவுட் திரையுலகில் பரபரப்பான இயக்குநராக வலம் வந்தார். இவ்விரு வெற்றிகளும் இவருக்கு தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றுத்தந்தது.


மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் நெல்சனின் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியான சமயத்தில் இருந்தே இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்க துவங்கியது. மேலும் இப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள், ட்ரைலர் மற்றும் ப்ரோமோ என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. எனவே இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருந்தனர்.

மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. மேலும் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது. இப் படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை, காட்சிகளில் லாஜிக் இல்லை என பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அத்தோடு இப்படம் வெளியாவதற்கு முன்பு வரை நெல்சனை புகழ்ந்து தள்ளிய அனைவரும் ஒரே நாளில் அவரை விமர்சனம் செய்ய துவங்கினார்கள். எனவே இதன் மூலம் நெல்சன் ரஜினியின் தலைவர் 169 படத்தை இயக்கும் வாய்ப்பையும் இழக்க கூடும் எனவும் வதந்திகளை பரப்பினார்கள். ஆனால் ரஜினியின் 169 படத்தை நெல்சன் தான் இயக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் ரஜினி மற்றும் நெல்சன் இணையும் தலைவர் 169 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. எனவே தற்போது கதை மற்றும் திரைக்கதை பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் நெல்சன்.

இந்நிலையில் தலைவர் 169 படத்திற்காக நெல்சன் வாங்கவுள்ள சம்பளம் பற்றி ஒரு தகவல் கசிந்துள்ளது.. அதாவது நெல்சன் இப்படத்திற்காக 12 கோடிக்கு மேல் சம்பளம் பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்க நெல்சன் 8 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். இருப்பினும் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் தற்போது நெல்சனின் சம்பளம் உயர்ந்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது .

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement