தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் தான் மாளவிகா மோகனன். இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்ககளின் ஆதரவைப் பெற்றார்.
அதற்கு அடுத்து அவர் தனுஷின் மாறன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து உள்ளார். இருப்பினும் மாறன் திரைப்படம் ரசிகர்களைக் கவரவில்லை. அத்தோடு எப்போதும் சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.
நேற்று மாளவிகா மோகனன் ட்விட்டரில் ரசிகர்கள் உடன் உரையாடினார். அப்போது பல கேள்விகளுக்கு ஓப்பனாக பதில் கூறினார் அப்போது ஒருவர் மாளவிகாவை ட்ரோல் செய்யும் வகையில் பதிவிட்டு இருந்தார்.
"நீ நடிப்பில் மோசம் என்பது எல்லோருக்கும் தெரியும், உங்க கவர்ச்சி போட்டோஸுக்கு தான் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்" என கூறி இருக்கிறார் அந்த நபர். அதற்கு பதில் கொடுத்த மாளவிகா 'நீயும் என்னை follow செய்கிறார். அதனால் நீயும் அப்படி தானா" என குறிப்பிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!