• Sep 20 2024

அஜித் பாடலை ஆட்டையைப் போட்டு விஜய்யின் 'நா ரெடி' பாடல் உருவானதா..? வீடியோ வெளியிட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விரைவில் ஆரம்பமாக உள்ளது.


இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 'நா ரெடி' பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் நேற்றைய தினம் அப்பாடல் வெளியானது. இந்த பாடலை தளபதி விஜய், அனிருத் மற்றும் அசல் கோளாறு ஆகியோருடன் இணைந்து  பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்தப் பாடலை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்ற அதே நேரத்தில் இப்பாடல் காப்பி சர்ச்சையிலும் சிக்கி உள்ளது. அதாவது அஜித் நடித்த திருப்பதி படத்தில் இடம்பெறும் திருப்பதி வந்தா திருப்பம் பாடலின் டியூனும், நா ரெடி பாடலின் டியூனும் ஒன்றாக இருப்பதாக கூறி நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 


Advertisement

Advertisement