பிரபல தொழிலதிபராக இருந்து பின்னர் நடிகராக மாறி பல படங்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த நிலையில், கடைசியாக வனிதா விஜயகுமாருடன் 'பிக்கப் டிராப்' என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார்.
ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென அவரது உடல் நலம் குறைய நேரிட்ட நிலையில், அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியானது. இதனையடுத்து பவர் ஸ்டார் சீனிவாசன் சமீப காலமாக ஓய்வில் இருந்து வந்த நிலையில், தற்போது திடீரென வனிதா விஜயகுமாரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக ரசிகர்களுக்கு காட்சி கொடுத்துள்ளார்.
அதாவது இன்ஸ்டா பக்கத்தில் வனிதா வெளியிட்டுள்ள அந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அதில் வனிதா விஜயகுமார் தனது வாயை குவித்துக் கொண்டு பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு முத்தம் கொடுப்பது போல போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மேலும் வனிதா விஜயகுமார், பவர் ஸ்டார் சீனிவாசன் உடன் விரைவில் பேட்டி எடுக்கப் போவதாக அறிவித்து இந்த புகைப்படங்களை வெளியிட்டிருப்பினும், அந்தப் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் பவர் ஸ்டாருக்கு வனிதா முத்தம் கொடுப்பதாக கூறி பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது "ஐயோ பவர் ஸ்டார் சீனிவாசன் பாவம், அவரை விட்டிடுங்க வனிதா" எனவும் நெட்டிசன்கள் பலவாறு கமெண்ட் போட்டு வனிதா விஜயகுமாரைக் கழுவி ஊற்றி வருகின்றனர்.
Listen News!