• Nov 10 2024

மேலேயும், கீழேயும் ஜீன்ஸ் அணிந்து.. வீதியுலா வந்த பிக்பாஸ் நடிகை.. முழுப்பைத்தியமா.? ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்ற ஒருவரே பிக்பாஸ் நடிகையான உர்ஃபி ஜாவித். இவர் வித்தியாசமாக உடை அணிவதற்கு பெயர் போனவர். அந்தவகையில் ஊக்கு, பேப்பர், பிளாஸ்டிக், கயிறு என்று பல பொருட்களை வைத்து உடை செய்து அணிவதை வழக்கமாக கொண்டிருக்கின்றார்.


இவ்வாறு தினம் தினம் ஏதாவது வித்தியாசமான உடை உடுத்தியும் மேலாடை அணியாமல் வீடியோ வெளியிட்டும் தொடர்ந்து டிரெண்டிங்கிலேயே இருந்தால் உடனடியாக திரையுலகில் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிடலாம் என்கிற முடிவில் அடுத்தடுத்த ஏற்பாடுகளை அடுக்கடுக்காக செய்து வரும் உர்ஃபி ஜாவேத் தற்போது ஜீன்ஸ் பேன்ட்டை வைத்து வித்தைக் காட்டி உள்ளார்.


அதாவது ஜீன்ஸ் பேன்ட் அணிந்து நடிகைகள் போஸ் கொடுப்பது வழக்கமான ஒன்று தான். அதே போல டெனிம் ஷர்ட்டுகளையும் விதம் விதமாக போட்டுக் கொள்வார்கள். ஆனால், மேலயும் ஜீன்ஸ் பேன்ட்டை கிழித்து ஆடையாக மாற்றி இப்படி போட்டுக் கொண்டு நடு வீதியில் உலா வருவார்களா? என்றால் அது கேள்விக் குறியான ஒன்று தான். அந்த விஷயத்தைத் தான் தற்போது செய்து திணறவிட்டுள்ளார் உர்ஃபி ஜாவேத்.


இவர் வீட்டிலோ அல்லது ஸ்டூடியோவில் மறைமுகமாக இருந்து எல்லாம் இப்படி ஃபேஷன் உடைகளை அணிந்து கொண்டு போட்டோஷூட் எடுப்பதெல்லாம் கிடையாது. அதை அப்படியே வீதியில் போட்டுக் கொண்டு மக்கள் மற்றும் ரசிகர்கள் பார்க்கும் அளவுக்கு வீதி உலா வருவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.


இந்நிலையில் இவர் தற்போது ஒரு படி மேலே சென்று டாப்ஸ் ஆகவும் ஜீன்ஸ் பேன்ட்டையே கிழித்துப் போட்டு வீதி உலா வந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் "சீக்கிரமே மனநல மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டியது தான்" எனக் கிண்டலாக கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement