சரவணா ஸ்டோர் கடையின் உரிமையாளரான சரவணன் அருள் நடித்த திரைப்படம்தான் தி லெஜெண்ட். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலே நாயகியாகவும், மயில் சாமி, மற்றும் பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் மே 29 ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அத்தோடு இப்படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட உள்ளது. இவ்விழாவில் திரையுலகப்பிரபலங்கள் பலரும் பங்கேற்க உள்ளனர் . இந்த படம் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி, மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ஒரு பாடல் வெளியாகிய நிலையில் இரண்டாவது பாடலாக வாடி வாசல் என்ற வீடியோ பாடல் கடந்த 20 ஆம் தேதி வெளியானது வெளியாகி பட்டிதொட்டி எல்லாம் கலக்கியுள்ளது. இப்பாடலுக்கு நடிகை ராய் லக்ஷ்மி நடனமாடியுள்ளார்.
இந்த பாடல் தான் தற்போது நெட்டிசன்களுக்கு பேசுபொருளாகியுள்ளது. இப்பாடலுக்கு சரவணன் ஆடும் ஆட்டத்தை பார்த்து ரசிகர்களே மூக்கில் விரல் வைத்துள்ளனர். ஆனால் இந்த பாடல் பல பாடல்களின் மெட்டுகளில் இருந்து உருவாக்கப்பட்டதாக நெட்டிசன்கள் கடுமையாக கலாய்த்து வருகின்றனர்.
வாடிவாசல் பாடல் பிரபுதேவாவும்,நடிகை ரோஜாவும் சேர்ந்து ஆடிய வா முனிம்மா வா என்ற பாடலிலும், நடிகர் விக்ரமின் தூள் படத்தின் கப்பகிழங்கு பாடலினதும், மற்றும் ஜிமிக்கி கம்மல் பாடலினதும் கலவை என்று நெட்டிசன்கள் கண்டுபிடித்து கலாய்த்து வருகின்றனர். இருப்பினும் அண்ணாச்சியின் ஆட்டம் வேற லெவல் என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
- ராயப்பனை வைத்து படம் எடுத்தால் எப்படி இருக்கும்-செஞ்சிட்டா போச்சு என பதிவிட்ட இயக்குநர் அட்லி
- சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 8 இல் மாஸ் என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன்-இந்த வாரம் பட்டைய கிளப்ப போகுது
- நடிகர் சசிகுமாரின் கிராமத்தில் இருக்கும் சொந்த வீட்டைப் பார்த்திருக்கின்றீர்களா?- எப்படி இருக்கு என்று பாருங்க
- சிவகார்த்திகேயனுக்கு நடந்த கொடுமை மாதிரி எந்த ஒரு நடிகருக்கும் நடந்ததில்லை-பிரபல தயாரிப்பாளர்
- சர்தார் திரைப்பட உரிமையைக் கைப் பற்றிய பிரபல தொலைக்காட்சி – முதலில் ஓடிடியில் தான் படம் ரிலீஸ் ஆகுமாம்
- தளபதி 67 திரைப்படம் எப்படி இருக்கும்? சூப்பர் பதில் சொன்ன லோகேஷ் கனகராஜ்.!
- மஞ்சள் நிற சேலையில் வளைத்து வளைத்து போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்…ரீசன்ட் போட்டோசூட்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!