தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஒரு வெற்றி நாயகனாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இதுவரை 65இற்கும் அதிகமான படங்கள் உருவாகி இருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வாரிசு'. இப்படத்தை வம்சி இயக்குகிறார்.
இப்படம் குறித்த அப்டேட்டுக்கள் அடுக்கடுக்காக அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் இப்படத்தின் முதல் பாடம் 'ரஞ்சிதமே' சில வாரங்களுக்கு முன் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து சிம்புவின் குரலில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் அடுத்த ஹிட் பாடலான 'தீ தளபதி' நேற்று மாலை வெளிவந்தது. தளபதி ரசிகர்களுக்கு பெரும் ட்ரீட்டாக இருந்த இப்பாடல் தற்போது சர்ச்சையிலும் சிக்கியுள்ளது.
அதாவது இந்த பாடல் காப்பியடித்து போடப்பட்டுள்ளது என்று நெட்டிசன்கள் பலரும் கூறி வருகிறார்கள். அந்தவகையில் அனிருத் இசையில் 'நானும் ரவுடி தான்' படத்தில் இடம்பெற்ற 'வரவா வரவா' பாடலை காப்பியடித்து 'தீ தளபதி' இசையமைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது கன்னட திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலையும், நான் ஈ படத்தில் வரும் 'ஈ டா ஈ டா' பாடலையும் சேர்ந்த கலவை தான் இந்தத் 'தீ தளபதி' என்றும் பலவாறாக கிண்டல் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..!
Athu thee thalapathy illa
Ani oda varava varava Nan thiruppi varva song oda copy#Thunivu #Ajithkumar #THUNIVURulingInternet pic.twitter.com/MIHVWXtNgV
Enna Thaman annayya idhellam..#Thunivu pic.twitter.com/11dSBR5TDt
#TheeThalapathy Wasted😂 Veppilai Veppilai song copy 🤣#VarisuSecondSingle #Ajithkumar𓃵 #THUNIVURulingInternet #ThunivuPongal2023 #Thunivu #HVinoth pic.twitter.com/bPtVSuwUgY
Listen News!