“அட்டா சும்மா” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நேச்சுரல் ஸ்டார் நானி. இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவாக வலம் வருவதோடு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.
ஆனால் கடந்த மூன்று வருடங்களாக நானிக்கு நல்ல ஹிட் படம் இல்லை. இதனால் இவரின் திரையரங்கு மார்க்கெட் சரிந்து வருகிறது. சமீபத்தில் நானி நடித்த அந்தே சுந்தரனிகி திரைப்படம் ஜூன் 10ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. இரண்டாவது வார இறுதியில் படத்தின் வசூல் மிகவும் குறைவாக இருந்தது.
இப்படம் இரண்டு தெலுங்கு மாநிலங்களில் சேர்ந்து பத்து நாட்களில் ரூ 12 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இருப்பினும் வெளிநாடுகளில் இப்படம் நல்ல வசூலை ஈட்டி வருகின்றது. இதனால் இவர் வர வர தனது சம்பளத்தை உயர்த்தி வருகின்றாராம்.
இதுவரை தெலுங்கு மாநிலங்களில் அதிக வசூல் செய்த நானியின் படங்கள் சமீபகாலமாக தோல்வியைச் சந்தித்து வருவதால் அவர் எப்படி சம்பளத்தை ஏற்றலாம் என பலர் நானியை விமர்சித்து வருவதோடு யோசித்து முடிவெடுங்கள் எனக் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- விக்ரம் படத்தில் தொப்பையைக் காட்டி நடித்தற்கு லோகேஷ் கூறிய விடயம் தான் காரணம்-கூச்சத்துடன் கூறிய விஜய் சேதுபதி
- பிரபல OTT தளத்தில் வெளியாகும் விக்ரம் திரைப்படம்- அட எப்போது தெரியுமா?
- எனது சினிமா வாழ்க்கையை காப்பாற்றியது விஜயகாந்த்- நடிகர் பாஸ்கியின் உருக்கமான பேச்சு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!