• Sep 20 2024

புதிய வீடு கட்டும் தொகுப்பாளினி மணிமேகலை- அவரே வெளியிட்ட வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் மியூசிக்கில் பிரபலமான தொகுப்பாளராக வேலை பார்த்து வந்தவர் மணிமேகலை. இதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து மணிமேகலை பிரபல தனியார் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். இதனால் மணிமேகலை மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். ஆனால், இவர்கள் காதலுக்கு இருவீட்டாரதும் எதிர்ப்புகளை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். அத்தோடு, மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணி புரிந்து வருகின்றார். அதோடு உசைனின் மதத்திற்கு மணிமேகலை மாறாததால் ஹுசைன் வீட்டிலும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

அத்தோடு சமீபத்தில் தான் இவர்களை குடும்பத்தினர் சேர்த்துக் கொண்டனர். மணிமேகலை திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். எனினும் தற்போது இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

அதன் பின்னர் இவர் விஜய் டிவியிலேயே செட்டில்ஆகி விட்டார் ஏன்று சொல்லலாம். அத்தோடு, இவர் Vjவாக இதுவரை 2400க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருப்பதாகவும், 2000கும் மேற்பட்ட லைவ் நிகழ்ச்சிகள், 120 க்கும் மேற்பட்ட பிரபலங்களின் பேட்டி, 250கும் மேற்பட்ட குழுவான நிகழ்ச்சிகள், 100க்கும் மேற்ப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்று 12 ஆண்டுகளில் செய்து இருப்பதாகவும் சமீபத்தில் மணிமேகலை கூறியிருந்தார். அதே போல இந்த தம்பதி யூடுயூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த யூடுயூப் சேனலை 1.39 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். அது மட்டுமில்லாமல் சமீப காலமாகவே மணிமேகலை பல விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி இருக்கிறார். அதற்கான புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்தார்.அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடத்தே வைரலாகியது.

இவ்வாறுஇருக்கையில் எப்போதும் தனது வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை வீடியோவாக வெளியிடும் மணிமேகலை சில நாட்கள் முன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதுவேறு ஒன்றும் இல்லை அவர் சொந்தமாக வாங்கிய இடத்தில் புதிய வீடு ஒன்று கட்ட தொடங்கியுள்ளார்.

அதன் முதல்படியாக போர் போட்டுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement