• Nov 10 2024

'தளபதி - 67' படம் குறித்து வெளியான புதிய தகவல்…மகிழ்ச்சியின் உச்சத்தில் விஜய் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்பவர் நடிகர் விஜய். ரசிகர்களால் 'தளபதி' என சிறப்பாக கொண்டாடப்படும் இவரின் படங்கள் வெளிவந்தால் ரசிகர்கள் அதனைப் பெரிய திருவிழா போன்று கொண்டாடி மகிழ்வர். அத்தோடு இவரது படங்கள் இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் திரையிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாரிசு' ஆகும் . இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவான இப்படத்தை தில் ராஜு தயாரிகின்றார். மேலும் பிரம்மாண்டமான முறையில் சமீபத்தில் படப்பிடிப்பை முடித்த்துள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், ஜெயசுதா, குஷ்பு, சங்கீதா கிரிஷ், சம்யுக்தா கார்த்திக், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தினுடைய படப்பிடிப்புகள் யாவும் நிறைவுற்றுள்ள நிலையில் தற்போது தளபதி ரசிகர்கள் தங்களின் மிகவும் அபிமான ஹீரோவின் அடுத்த படமான 'தளபதி 67' பற்றி மிகவும் ஆர்வமாக உள்ளனர். இது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் லோகேஷ் கனகராஜ் இயக்குவதோடு 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்' தயாரிக்க இருப்பதாக ஏற்கெனெவே செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் இது பற்றி தெரிவித்திருக்கின்றார். அதாவது "பத்து நாட்களுக்கு முன்புதான் திரைக்கதையை எழுதத் தொடங்கினேன்" என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். தயாரிப்பு நிறுவனம் முதலில் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதால் மேலும் எதையும் வெளியிட முடியாது எனவும் அவர் கூறினார். அதுமட்டுமன்றி விஜய்யின் 'வாரிசு' படம் வெளிவருவதற்கு முன் திரைக்கதையும் படப்பிடிப்புக்குத் தயாராகிவிடும் என்று அவர் சூசகமாகக் கூறினார்.

எனவே வரவிருக்கும் தமிழ்ப் படங்களில் 'தளபதி 67' மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. இத்தகவல் விஜய் ரசிகர்களுக்கு பெரு விருந்தாக அமைந்திருக்கின்றது. இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர் நம்ம தளபதி ரசிகர்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement