• Sep 20 2024

ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு ஏற்பட்ட புதிய பிரச்சினை- என்னது பெயர் மாற்றப்படவுள்ளதா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார் வில்லனாகவும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் வருகின்றனர். 

இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.இப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகளும் நடந்து வருகின்றது. அண்மையில் இப்படத்தின் முதல் பாடல் காவாலா வெளியாகி ட்ரெண்ட் ஆன நிலையில் அடுத்து ஹுகும் என்ற இரண்டாவது பாடல் ப்ரோமோ நேற்று வந்திருந்தது.


 அந்த பாடலுக்கு தற்போது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.தற்போது ஜெயிலர் என்ற டைட்டிலால்  ஒரு பிரச்சனை வந்து இருக்கிறது. ஏற்கனவே மலையாளத்தில் ஜெயிலர் என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. 


அதனால் அதே டைட்டிலில் கேரளாவில் ரஜினி படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் வந்து இருக்கிறது.கேரளாவில் மட்டும் வேறு டைட்டிலில் ஜெயிலர் படம் வர பரிசீலனை நடந்து வருவதாக கூறப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.  


Advertisement

Advertisement