நெல்சன் இயக்கத்தில் ரஜனி நடிக்கிற திரைப்படம் தான் ஜெயிலர்.இப் படம் குறித்த அறிவிப்பு கடந்த பெப்ரவரி மாதமே வெளியிடப்பட்டாலும், அப்படத்தின் ஷூட்டிங் தற்போது தான் ஆரம்பமாகி உள்ளது.
ஆக்ஸ்ட் 10-ந் தேதி முதல் ஷூட்டிங் தொடங்கப்பட்டு உள்ளது. ஆனால் ரஜினி வருகிற ஆகஸ்ட் 22-ந் தேதி தான் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அதுவரை இதர நடிகர், நடிகைகள் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
அத்தோடு ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனை சமீபத்திய பேட்டியில் அவரே உறுதிப்படுத்தினார். இதுதவிர வில்லனாக பிரபல கன்னட நடிகர் ஷிவராஜ்குமார் நடிக்க உள்ளார். இதுதவிர நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பிரியங்கா மோகன் தமன்னா ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளார்கள
இதற்கிடையே இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வந்தன.
அதன்படி இப்படத்தில் வசந்த் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. நாளை தொடங்க உள்ள ஜெயிலர் திரைப்படத்திற்காக வசந்த் ரவி புதிய கெட்டபிற்கு மாறியுள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
Listen News!