• Sep 20 2024

ரஜினி 169 வது படத்தின் புதிய மாஸ் அப்டேட்- அட அப்போ இன்னும் காத்திருக்க வேணுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் அண்ணாத்த அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது தனது 169 படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் இயக்குவதோடு சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது.

அனிரூத் இசையமைக்கும் இப்படத்தில், பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார்கள் என தகவல் வெளியாகியிருந்தது.

மேலும், வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது நிலையில், தற்போது இப்படத்தின் First லுக் குறித்து மாஸ் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காத்திருக்கும் தலைவர் 169 படத்தின் First லுக், ரஜினிகாந்தின் பிறந்தநாளில் வெளியாகும் என்று தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement