• Sep 20 2024

பைக்கில் பயணித்த யூடியூப் பிரபலம் ஜி.பி முத்துக்கு ஏற்பட்ட புதிய சோதனை - வழக்கு பதிவு செய்த போலிஸார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் தான் ஜி.பி முத்து. இவரது காமெடி வீடியோக்கள் ஆரம்பத்தில் சர்ச்சையில் சிக்கினாலும் பிற்காலத்தில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது.

டிக்டாக் செயலிக்கு பிறகு பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் வீடியோ பதிவேற்றி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும் பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதும் உண்டு.


இந்நிலையில் யூடியூபர் வாசன் 150 கிமீ வேகத்தில் ஜி.பி. முத்துவை பின்னால் அமர வைத்து பைக் ஓட்டி சாகசம் செய்யும் வீடியோ தற்போது வெளியாகி    இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து கோவை போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.


இது குறித்து கோவை மாநகரக் காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "செப்டம்பர் 14ம் தேதி டிடிஃப் வாசன் என்ற நபர்  அவரது இரு சக்கர வாகனத்தில் யூடியூபர் ஜி.பி.முத்துவை பின் சீட்டில் அமர வைத்து கோவை மாநகரம், டி3 போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்காடு மெயின் ரோடு, எம்டிஎஸ் பேக்கிரி அருகே அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாகவும் வாகனத்தை ஓட்டி அதை பதிவு செய்து அவரது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார். 


இது சம்பந்தமாக அவர் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என போலீசார் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement