லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.
இப்படத்தின் எடிட்டிங் பணிகளைத் தொடர்ந்து அடுத்ததாக விஎஃப்எக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் தரத்தை தீவிரமாக மெறுகேற்றி வருகிறார்.இப்படத்தின் இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான தமிழ்,தெலுங்கு,கன்னடம் ஆகிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இதனை அடுத்து தற்பொழுது ஹிந்தி மொழிக்கான போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் விஜய் சஞ்சய்தத்தின் கழுத்தை பிடிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!