• Sep 20 2024

நயன்தாராவின் கனெக்ட் படத்திற்கு ஏற்பட்ட புதிய சிக்கல் -திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு!

stella / 1 year ago

Advertisement

Listen News!

மாயா படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் கனெக்ட்.ஹாரர் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள இப்படத்தில் சத்யராஜ், அனுப்பம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் நயன்தாராவின் பிறந்தநாள் அன்று வெளியாகியது.இந்த டீசரில், நயன்தாராவுடன் இருக்கும் குழந்தைக்கு பேய் பிடித்துள்ளது போல கதையமைக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அனுபம் கேர் வீடியோ கால் மூலம் பேய் ஓட்டுபவராக வருகிறார். இப்படம், 99 நிமிட நீளத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், கனெக்ட் திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி வரும் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 99 நிமிடங்கள் ஓடும் இந்த படத்திற்கு இடைவேளை இல்லை என இயக்குநர் அஷ்வின் தெரிவித்திருந்த நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 இடைவெளை இல்லாமல் படத்தை வெளியிட முடியாது என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்திருந்த நிலையில், படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement