தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் நானும் ரௌடிதான், இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்தீபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மூலம் விக்னேஷ் சிவனுக்கும், நம்ம லேடி சூப்பர் ஸ்டாருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. இந்நட்பு காதலாக மாறி இன்று திருமணத்தில் முடிந்துள்ளது. அந்தவகையில்,இவர்கள் இருவரும் வருகின்ற ஜூன் மாதம் 9இல் திருமண வாழ்வில் இணையவுள்ளனர். திருமணம் திருப்பதியில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில் இதற்காக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் அனுமதி கோரி இருந்தனர்.
இவர்களின் திருமணத்திற்கு இருவீட்டார் தரப்பிலிருந்தும் 150 பேருக்கு மேல் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்டதால் அதற்கு தேவஸ்தான அதிகாரிகள் அனுமதி தர மறுத்துவிட்டர்களாம். இதனால் திருமணம் மகாவலி புறத்திலுள்ள நட்சத்திர ஓட்டலில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தற்போது மிக வேகமாக நடைபெற்று வருகின்றது.
இவர்களது திருமணத்தில் உறவினர்களும்,சினிமா வட்டாரங்களும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளார்களாம்.தொடர்ந்து சென்னையில் பிரமாண்டமாக திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டுள்ள நயன்- விக்கி ஜோடி அதில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.
Listen News!