கன்னடத்தில் வெளியாகிய சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படமான முஃப்தி திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் திரைப்படம் தான் பத்து தல. இப்படத்தினை சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய ஒபேலி கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கி வருகிறார். ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கன்னியாகுமரி பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, தற்போது ஷூட்டிங் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.இப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்து வருகின்றார்.
விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து சிம்பு – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது. இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்கு ஷூட்டிங் மீதம் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
முஃப்தி படத்தை போல் இல்லாமல் சிம்புவுக்கு இந்த படத்தில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னதாக பத்து தல படத்தை டிசம்பர் 14-ஆம்தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு, படக்குழுவினர் பணியாற்றி வந்தனர். ஆனால் தற்போதைய சூழலில் பத்து தல படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டிற்கு தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு, வெந்து தணிந்தது படங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் பத்து தல படத்தின் மூலம் ஹாட்ரிக் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பில் சிம்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!